இந்தியாவில் வாழும் 1 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை தர பரிசீலிக்க வேண்டும்: ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர்

டெல்லி: 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். ஒரு லட்சத்துக்கு மேல் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தர பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்தோர்க்கு மட்டுமே குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார். பின்னர் மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80  உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம் சார்ந்தோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மதங்களைச் சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மசோதா விளக்குகிறது.

Related Stories: