×

சபரிமலையில் 24 நாட்களில் 14 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 24 நாட்களில் 14 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. கடந்த வருடத்தை விட இவ்வருடம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடை திறந்த அன்று முதலே சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில பக்தர்கள் அதிக அளவில் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். இதனால் கோயில் வருமானமும் கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த 24 நாட்களில் ரூ.69 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதுபோல நடை திறந்த இந்த 24 நாட்களில் 14 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் அருகே அகஸ்தியர் மலையில் வசிக்கும் ஆதிவாசிகள் 101 பேர் இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் செய்தனர். அவர்கள் பாரம்பரிய முறையிலான கதளி வாழைக்குலை உட்பட பொருட்களை ஐயப்பனுக்காக கொண்டு வந்திருந்தனர்.

பன்னீர் வேண்டாம்

சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து விபூதி, சந்தனம், திருநீறு உட்பட பொருட்களை கொண்டு வர வேண்டாம். அவற்றை தனியாக காகிதத்தில் பொதிந்து பக்தர்கள் கொண்டு வர வேண்டும். மேலும் பன்னீர் கொண்டு வர வேண்டாம். பன்னீர் கெமிக்கல் என்பதால் கோயிலில் அதை பயன்படுத்துவது கிடையாது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் இருமுடி கட்டுடன் பன்னீரையும் கொண்டு வந்து கோயிலில் கொடுக்கின்றனர். அதனால் எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sami Darshan ,devotees ,Sabarimala , Sabarimala
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...