இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து 28,752-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,596க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 88 குறைந்து ரூ.28,752க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.46.40க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும்  விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இரக்கமே நீடித்து வருகிறது.

இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை..
சென்னையில் இன்று (டிசம்பர் 10) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமிற்கு 11 ரூபாய் குறைந்து 3,596 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நேற்று 28,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.88 குறைந்து  இன்று 28,752 ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரலாற்றில் ரூ. 29 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை 3 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 13ம் தேதி அதற்கு கீழே இறங்கியது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி ரூ.46.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : sovereign , Gold, Chennai, Ornaments Gold
× RELATED ஆபரணத் தங்கத்தின் விலை சரசரவென சரிவு : 6...