×

ரோபோ ஹோட்டல், எலிகளுடன் சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது விண்கலம்

ரோபோ ஹோட்டல் மற்றும் சோதனைக்காக எலிகளுடன் விண்கலம் ஒன்று சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது.ரோபோ டூல்ஸ்களை பாதுகாக்கும் முயற்சியில் ஒரு பாதுகாப்புமிக்க சேமிப்பு அலமாரியை ஏற்படுத்த உள்ளது. விண்வெளியில் அமைய உள்ள இந்த அலமாரி உடன் ஒரு ‘ரோபோ ஓட்டலும்’ இணைக்கப்பட உள்ளது. இந்த ஓட்டலில் முதலாவதாக இரண்டு ரோபோக்கள் தங்க வைக்கப்பட உள்ளன.

இந்த இரண்டு ரோபோக்களும் விண்வெளி மையத்தில் ஏதேனும் லீக் ஏற்படுகிறதா என்பதைத் தொடர்ந்து ஆராயும். குறிப்பாக அமோனியா வாயு வெளியேற்றத்தை அறிந்து அதை சரிசெய்ய இந்த ரோபோக்கள் உதவும். 2015-ம் ஆண்டு இந்தப் பிரச்சினைக்காக முதன்முதலில் ஒரு ரோபோ உருவாக்கப்பட்டது.இதற்குத் துணையாகத்தான் இந்தாண்டு லீக் ஏற்படுவதைக் கண்டுபிடிக்க மற்றொரு ரோபோவும் சர்வதேச விண்வெளி மையம் அருகே உள்ள ரோபோ ஓட்டலுக்குக் கொண்டு வரப்படுகிறது.

பாதுகாக்கப்படும் ரோபோ டூல்ஸ்களை கதிர்வீச்சு, எரிக்கற்கள், விண்வெளியில் உலவும் சிறு மற்றும் பெரு துகள்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க இந்த இரண்டு ரோபோக்கள் ‘ரோபோ ஓட்டலில்’ தங்கி பணியாற்றும். நாசாவுக்கான புதிய பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக வந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்தடைந்தது. தென் பசிபிக் வழியாக 262 மைல் (421 கிலோமீட்டர்) பயணம் செய்து விண்வெளி ஆய்வு நிலையத்தை ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அடைந்து உள்ளது.

விண்வெளியில் எடையற்ற தன்மை காரணமாக  ஏற்படும் தசை மற்றும் எலும்பு இழப்பின் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக பரிசோதனையின் ஒரு பகுதியாக டிராகன் 40  எலிகளையும்  கொண்டு சென்று உள்ளது.மேலும், பார்லி விதைகள் விண்வெளியில் எவ்வாறு வளரக்கூடும் என்பதை சோதிக்க கொண்டு செல்லப்பட்டு உள்ளன.எலிகள் விண்வெளி நிலையத்தில் நான்கு வாழ்விடங்களில் வாழ்கின்றன, மேலும் ஜனவரி மாதம் திரும்பிய பின் பூமியில் மற்ற  எலிகளுடன் ஒப்பிட்டு சோதனை நடத்தப்படும்.

Tags : Robot Hotel ,International Space Center , Robot Hotel, International Space Center with rats spacecraft
× RELATED விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட...