உரிமைகள் உனக்கானது, யாரும் கொடுக்கவோ,பறிக்கவோ முடியாது..சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!!

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பாரீஸ் நகரில் அன்றைய ஐநா சபை தலைமையகம் இருந்தது. 58 நாடுகள் இணைந்த ஐநா சபையில் 48 நாடுகளின் ஒத்துழைப்பு வாக்குகளுடன் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் டிசம்பர் 10-ம் தேதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகள் அனைத்து சூழ்நிலைகளிலும் மீட்கப்பட வேண்டும் என்பதே ஐநா-வின் குறிக்கோளாக இருந்தது. இதற்காக உலக நாடுகள் பலவற்றிலும் பிரச்சாரங்களும், விவாதங்களும், விழிப்பு உணர்வு பேரணிகளும் நடத்தப்பட்டன.மேலும் மனித உரிமைகள் மீதான விழிப்பு உணர்வுக்காக 1966-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ’மனித உரிமைகள் களத்தில் சிறந்தோருக்கான ஐநா விருது’ அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் 71-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய தீம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #‘Youth Standing Up for Human Rights என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தாண்டுக்கான ஐநா மனித உரிமைகள் மையம் செயல்பட உள்ளது. இந்தாண்டுக்கான மனித உரிமைகள் தினம், சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும் அமைதியான முறையில் எழுச்சியாய் வரும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரை வரவேற்று கொண்டாடுகிறது. அதுமட்டுமின்றி இந்தாண்டுக்கான நோக்கம் “அனைத்து தரப்பட்ட மக்களின் உள்நாட்டு மொழிகள் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆழப்படுத்துதல்” ஆகும்.

மனித உரிமைகள் ஆணையம் சொல்வது மட்டுமின்றி உரிமைகள் என்பது நமக்கானது. இது யாரும் நமக்கு கொடுக்க மாட்டார்களா! அல்லது யாரும் நமது உரிமைகளை பறிப்பார்களா என்று எதிர்பார்க்கவோ… கவலைப்படவோ தேவையில்லை. நமக்கான உரிமையை நாமே நிலை நாட்டுவோம்.இந்த மனித உரிமைகள் தினத்தன்று மனிதம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களின் உயிர்மையையும் போற்றுவோம்.

Related Stories: