×

பாஜ ஆட்சிக்கு வந்தால் நிலையான ஆட்சி: ஜார்கண்ட் பிரசாரத்தில் மோடி பேச்சு

பார்ஹி: ‘‘பாஜ ஆட்சிக்கு வந்தால் தான் நிலையான ஆட்சியை தரமுடியும் என மக்கள் நம்புகிறார்கள்’’ என ஜார்கண்ட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.   கர்நாடகாவில் 15  சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பெரும்பாலான தொகுதிகளை பாஜ கைப்பற்றியுள்ளதன் மூலம்  அங்கு எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழாமல் தப்பியது. வாக்கு எண்ணிக்கை முடிவு பற்றி அறிந்த பிரதமர் மோடி நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசை குற்றம்சாட்டினார்.  மூன்றாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில் பர்ஹி பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது;

கர்நாடகாவில் தேர்தல் மூலம் மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் குறுக்கு வழியில் திருட பார்த்தது. நாட்டின் தென்பகுதியில் உள்ள இந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜ பெரு வெற்றி பெற்றதன் மூலம் ஜனநாயக வழியில் காங்கிரஸ் கூட்டணியை பொதுமக்கள் தண்டித்துள்ளனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த கர்நாடக வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜ ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என்று பொதுமக்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி, மோசடி கூட்டணி என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.

Tags : Modi ,Jharkhand ,BJP , Baja rule, Jharkhand campaign, Modi
× RELATED ஜார்கண்டிலும் பறவைக் காய்ச்சல்