×

காங்கிரஸ் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று 73வது பிறந்த நாள். ஆனால் நாட்டில் பாலியல் பலாத்காரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு அவர் பிறந்த நாளை கொண்டாட மறுத்துவிட்டார். எனினும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பிறந்த நாள் கொண்டாடும் சோனியாகாந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில், “சோனியா காந்திக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்டக் காலம் பணியாற்றும் சோனியா காந்தியின் முன்மாதிரியான வலிமை தன்மையானது காங்கிரஸ் தலைவர்களை உற்சாகப்படுத்தி உள்ளது” என்று பதிவிடப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், மிலிந்த் தியோரா உட்பட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Sonia ,Congress ,birthday , Congratulations to Congress President, Sonia, birthday, leaders
× RELATED விசாரணை அமைப்புகளை தவறாக...