கோவை பூங்காவில் மாணவி பலாத்காரம்: சரணடைந்த வாலிபர் பகீர் வாக்குமூலம்

கோவை: கோவையை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி கடந்த மாதம் 26ம் தேதி இரவு 8 மணியளவில் அதே பகுதியில் உள்ள பூங்காவில் காதலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், தங்களை போலீசார் எனக்கூறி மிரட்டி காதலனை தாக்கினர். பின்னர் அந்த மாணவி மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்யப்பட்டார்.  இது குறித்த புகாரின் பேரில் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு ெசய்து, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30), பப்ஸ் கார்த்தி (27) ஆகியோரை கைது செய்தனர். இதில், மணிகண்டன் (32) என்பவர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

Advertising
Advertising

ேபாலீசாரிடம் விளக்கம்: இததையடுத்து மணிகண்டனிடம் கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் ‘‘நான் இரவு நேரத்தில் என் நண்பர்களுடன் அடிக்கடி மாநகராட்சி பூங்காவிற்கு வருவேன். சம்பவத்தன்று மாணவி மற்றும் அவரது காதலர் மட்டுமே இருந்தனர். வேறு யாருமில்லை. அந்த மாணவியை நான் சில முறை பார்த்திருக்கிறேன். அவரது காதலரை விரட்டிவிட்டு நான் பேச முயன்றேன். ஆனால் அவரது காதலர் செல்ல மறுத்து வாக்குவாதம் செய்தார். நாங்கள் அவரை தாக்கியபோது மயக்கமாகி விட்டார். நான் அந்த மாணவியை மிரட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து தப்பியோடி விட்டேன்’’ எனக் கூறினார். மணிகண்டனின் செல்போனில் மாணவி பலாத்கார காட்சி தொடர்பான வீடியோ, போட்டோ இருப்பதாக கூறப்படுகிறது. அதை வேறு யாருக்காவது அனுப்பியிருக்கிறாயா? என போலீசார் கேட்டனர். இவர் மேலும் சில பெண்களிடம் அத்துமீறி நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதுபற்றியும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: