×

இலங்கை அருகே காற்று சுழற்சி தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: இலங்கை அருகே வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த வாரம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த மே மாதத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு போக்க முடியும். இருப்பினும் இந்த ஆண்டுக்கான இயல்பு மழை அளவை இன்னும் எட்டவில்லை. இந்த ஆண்டுக்கான பருவமழை காலம் முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்துள்ளது. இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக இலங்கைக்கு தென் கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகரும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலும், தற்ேபாதுள்ள சூழ்நிலையில், தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Tags : Sri Lanka Light ,Sri Lanka , Sri Lanka, air circulation, light rain
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...