×

அரசும், தேர்தல் ஆணையமும் என்ன குளறுபடி செய்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும்: முன்னாள் காங்., தலைவர் பேட்டி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னாள் எம்பி ஆரூண் தலைமை வகித்தார். பொருளாளர் நாசே ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கேக் வெட்டி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ெபாதுச்செயலாளர் சீரஞ்சிவி, மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், அரும்பாக்கம் வீரபாண்டியன், நாஞ்சில் பிரசாத், திருவான்மியூர் மனோகரன், எம்.பி.ரஞ்சன்குமார், காண்டீபன், பி.வி.தமிழ்ச்செல்வன், சூளை ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘‘என்ன குளறுபடிகள் செய்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான். அப்படியிருக்கும் போது பல கட்டமாக தேர்தல் நடத்துவது என்பது வேடிக்கையாக உள்ளது’’ என்றார்.

Tags : government ,Congress ,DMK ,Election Commission ,election ,forum , DMK, Congress alliance, election, victory, ex-Cong., Leader
× RELATED பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில்...