கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சிப்பூ

கொடைக்கானல்: குறிஞ்சி மலர்கள் 2 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் பூக்கக்கூடியது. குறிஞ்சிப்பூ சுமார் 1,600 மீட்டர் உயரத்திற்கு மேல் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளரக்கூடியது. இம்மலர்கள் கேரள மாநிலம் இடுக்கி, மூணாறு பகுதிகளிலும், தமிழகத்தில் ஆனைமலை, ஊட்டி, கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் ‘ஸ்ட்ரோப்பிலான்தஸ் குந்தியானா’. குறிஞ்சி பூவில் எட்டு வகையான பூக்கள்

உள்ளன.

தற்போது கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. இந்த பூக்களை பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதுகுறித்து பூங்கா மேற்பார்வையாளர் கோபு கூறுைகயில், ‘‘இந்த அரிய வகை நீலக்குறிஞ்சி வைத்து 12 ஆண்டுகளாகிறது. தற்போது இதில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. இவற்றை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்’’ என்றார்.

Related Stories: