காவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

தண்டையார்பேட்டை: பாலியல் தொல்லை வழக்கில் கைதான வாலிபர், காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பாரிமுனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் வசிப்பவர் மலர் (30). அதே பகுதி பிளாட்பாரத்தில் வசிப்பவர் அருள் (25). இருவரும் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்தனர். இதில் மலருக்கு திருமணமாகிவிட்டது.

Advertising
Advertising

நேற்று முன்தினம் இரவு பிளாட்பாரத்தில் மலர் தூங்கிக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் வந்த அருள், மலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மலர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு  ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அருளை சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அவரை வடக்கு கடற்கரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவிட்டு காவல்நிலையத்தில் ஓரமாக உட்கார வைத்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அருள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: