பாதாள சாக்கடை அடைப்பால் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

அண்ணாநகர்: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் பி.சாலையில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் நேற்று அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறு போல ஓடியது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த மெட்ரோ ரயில் நிலையம் அருகே பி.சாலையில் அரசு பேருந்து, ஆட்டோ கார், வேன், இருசக்கர வாகனம், லாரி ஆகிய வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் இந்த சாலை பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஆறாக ஓடுயதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி 127வது வார்டு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை, என பயணிகள் குற்றம்சாட்டினர். எனவே  உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: