×

மும்பை 362/8

பரோடா அணியுடன் வதோதராவில் நேற்று தொடங்கிய ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 362 ரன் குவித்துள்ளது. ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஜெய் பிஸ்டா 18 ரன், பிரித்வி ஷா 66 ரன் (62 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அபிமன்யுசிங் ராஜ்புத் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினர்.

ஷுபம் ரஞ்ஜனே 36, கேப்டன் சூரியகுமார் யாதவ் 0, ஆதித்யா தாரே 12 ரன் எடுத்து பார்கவ் பட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மும்பை வீரர் ஆதித்யா தாரேவுக்கு இது 150வது ரஞ்சி கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை எட்டும் முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. ஆகாஷ் பார்க்கர் 15 ரன் எடுத்து குருணல் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷாம்ஸ் முலானி - ஷர்துல் தாகூர் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தது. ஷர்துல் தாகூர் 64 ரன் (63 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி யூசுப் பதான் பந்துவீச்சில் பார்கவ் பட் வசம் பிடிபட்டார். முலானி 56 ரன், ஷஷாங்க் அட்டார்டே 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.


Tags : Mumbai , Mumbai 362/8
× RELATED 2வது சூப்பர் ஓவரில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது மும்பை