அகில இந்திய டேபிள் டென்னிஸ் சென்னையில் தொடங்கியது

சென்னை: அகில இந்திய அளவிலான அஞ்சல்துறை டேபிள் டென்னிஸ் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் அகில இந்திய அளவிலான 35வது டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடக்கிறது.  நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்  தமிழ்நாடு அஞ்சல்  வட்டத்தின் தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத், அர்ஜுனா விருது பெற்றவரும், சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரருமான அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 18 அஞ்சல் வட்டங்களை சேர்ந்த  வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். லீக் சுற்று நாளை வரை நடக்கிறது. இறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

Advertising
Advertising

Related Stories: