தெற்காசிய மகளிர் கால்பந்து: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்

தெற்காசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் கால்பந்து இறுதிப் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் நேற்று மோதின. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாகக் களமிறங்கிய நேபாள அணியின் சவாலை முறியடித்த இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்திய வீராங்கனை பால தேவி 18வது நிமிடம் மற்றும் 56வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அதிக கோல் போட்ட (5 கோல்) வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்திய மகளிர் கால்பந்து அணி தொடர்ந்து 3வது முறையாக தெற்காசிய விளையாட்டு போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியது. வெற்றி மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றனர் இந்திய அணியினர்.

Related Stories:

>