காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு எகிப்து வெங்காயம் திருச்சி வந்தது...1கிலோ r100க்கு விற்பனை

திருச்சி: வெங்காயம் விலை உயர்வை தொடர்ந்து பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. இவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இன்று திருச்சியில்  விற்பனைக்கு வந்தது. தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ேபான்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் வந்தது. மழையால் வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது விலை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.20, ரூ.30 என்று விற்கப்பட்டது. இது வரலாறு காணாத வகையில் உயர்ந்து ரூ.140 இருக்கிறது. அதேபோல ரூ.30, ரூ.40க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) ரூ.150 வரை உயர்ந்துள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் சில்லறை விலைக்கு ரூ.120க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் ரூ.130க்கு விற்பனையாகிறது. வெங்காயம் விலை ஏற்றத்தில் இருந்து மீள்வதற்குள் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் நேற்றை விட கிலோவுக்கு ரூ.20 அதிகமாக இன்று விற்பனையாகிறது. அதாவது, பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50, கேரட் - ரூ.40, உருளைக்கிழங்கு - ரூ.30, புடல் - ரூ.40, சேனைக்கிழங்கு - ரூ.30, சவ்சவ் - ரூ.20, பீட்ருட் - ரூ.40, முட்டைகோஸ் - ரூ.25, கத்திரி - ரூ.70ம் விற்பனையாகிறது. நேற்று 435க்கு விற்ற முருங்கைக்காய் இன்று கண்ணிலேயே காணவில்லை.

ஒரே நேரத்தில் வெங்காயம், காய்கறிகள் உயர்ந்திருப்பது பொதுமக்களை நிலைகுலைய வைத்துள்ளது. இப்படியே சென்றால் சம்பாதிக்கும் சம்பளம் அனைத்தும் மளிகை, காய்கறிக்கே சரியாகிவிடும் நிலை தான் ஏற்படும் என்றும் பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை

வெளிப்படுத்தினர். இந்த நிலையில் இன்று திருச்சி வெங்காய மண்டிக்கு வெளிநாட்டு வெங்காயம் விற்பனைக்கு வந்தது. எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கப்பல் மூலம் மும்பைக்கு வந்துஅங்கிருந்து திருச்சிக்கு இன்று வந்தது. ஒரு கிலோ ரூ.100 ரூபாய்க்கு இந்த வெங்காயம் விற்கப்பட்டது. இந்த வெங்காயம் அளவில் பெரிதாக உள்ளது. ஆனால் ருசியில் இந்திய வெங்காயம் அளவுக்கு இருக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: