தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து மக்களவையில் திமுக எம்.பி தயாநிதிமாறன் பேச்சு

டெல்லி: தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து மக்களவையில் திமுக எம்.பி தயாநிதிமாறன் பேசிவருகிறார். அகதிகளாக வரும் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனார் பாடலை குறிப்பிட்டு தயாநிதிமாறன் பேசி வருகிறார். அச்சத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது பாஜக அரசு என்று தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு பயந்து கிறிஸ்தவர்களுக்கு அனுமதிக்கிறதா பாஜக அரசு? என்று தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். பெரும்பான்மை பலம் இருப்பதால் பாஜக அரசு அராஜகமாக செயல்படக்கூடாது என தயாநிதிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பான்மை பலம் இருந்தாலும் பணிவுடன் அரசு பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories:

>