×

ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.28,840க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.28,840க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ. 3,605க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.46.60 காசுகளாக உள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.46,600 ஆக உள்ளது. வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று காலை, சென்னயைில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.96 குறைந்து ரூ.28,800க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது.

இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.Tags : Chennai , Increase in gold jewelery prices in Chennai
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு