×

உலகின் குறைந்த வயது பிரதமர் பெருமை பெற்ற பின்லாந்து: 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு

ஹெல்சின்கி: உலகின் வயது குறைந்த பிரதமராக 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பின்லாந்தில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்லாந்தில் தற்போது 5 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக்  கூட்டணிக்கு சோசியல் டெமாக்ரடிக் கட்சி தலைமை வகிக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி கடந்த 6 மாதங்களாக பிரதமராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே, பிரதமர் ஆண்டி ரின்னி மீது  விமர்சனங்கள் எழுந்தன.

தபால்துறை வேலை நிறுத்தம் தொடர்பாக ஆண்டி ரின்னி சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், பிரச்னையை சரியாக கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. தொடர் எதிர்ப்பு காரணமாக தன் பிரதமர் பதவியை ஆண்டி  ரின்னி ராஜினாமா செய்தார். இதனால், பின்லாந்தில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த, 34 வயதான சன்னா மரின் தற்போது பின்லாந்தின் பிரதமராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் 35 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் அனைவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள  சன்னா மரின் உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு நியூலாந்தின் பெண் பிரதமரான ஜசிந்தா ஆர்டர்ன் (37) தான் வயது குறைந்த பிரதமராக கருதப்பட்டார். இவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக  பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சன்னா மரின் பேட்டி:

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னா மரின், மக்களின் நம்பிக்கையைப் பெற நாங்கள் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது. என் வயது குறித்தும், என் பாலினம் குறித்தும் நான் எதுவும் யோசிக்கவில்லை. என் கவனம் முழுவதும் மக்கள்  எங்கள் மீது கொண்ட நம்பிக்கை குறித்தும், நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் குறித்துமே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.



Tags : Channa Marin ,world ,Finland , Finland, the world's youngest Prime Minister, honors 34-year-old Channa Marin
× RELATED சில்லி பாயின்ட்…