பாலியல் புகாரை திரும்ப பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு.... உபி-யில் பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறது

உபி: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் புகாரை திரும்ப பெற மறுத்த பெண் மீது அமிலம் வீசப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த அடுத்த வெளிச்சத்துக்கு வரும் பாலியல் வன்முறைகளால் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் முசாபர் நகரில் பாலியல் வழக்கை திரும்ப பெற மறுத்ததால் பெண் ஒருவர் மீது குற்றவாளிகள் அமிலத்தை ஊற்றி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

Advertising
Advertising

அமில வீச்சில் காயமடைந்த பெண் முசாபர் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் மீது வீசப்பட்ட அமிலம் வீரியம் குறைந்ததால் சிறிய காயங்களுடன் அந்த பெண் உயிர் தரப்பினர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை முசாபர் நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: