தூங்கினால் ஒரு லட்சம் ரூபாய்!

நன்றி குங்குமம் முத்தாரம்

கல்லூரி முடிந்தவுடன் ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு இன்டெர்ன்ஷிப் போவது மாணவர்களுக்கு நிறைய அனுபவத்தைக் கொடுக்கும். அந்த இன்டெர்ன்ஷிப் கடினமாகக் கூட இருக்கலாம். இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ‘வேக்ஃபிட் இன்னோவேஷன்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அதிரடியாக ஒரு சலுகையை அறிவித்துள்ளது.

ஆம்; இன்டெர்ன்ஷிப்பில் தூங்குவது மட்டுமே உங்களது வேலை. தினமும் 9 மணி நேரம் தூங்க வேண்டும். அதுவும் 100 நாட்களுக்கு. இப்படித் தூங்கினால் ஒரு லட்சம் ரூபாயைத் தருவதாக வேக்ஃபிட் அறிவித்துள்ளது.

நீங்கள் தூங்கும்போது ஸ்லீப்பர் டிராக்கர் மூலம் உங்களைக் கண்காணிக்கும் வேக்ஃபிட். எப்படியெல்லாம் நீங்கள் தூங்குகிறீர்கள் என்று ஆய்வு செய்யும். எதற்காக இந்த ஆய்வு என்பதை வேக்ஃபிட் இன்னும் வெளியிடவில்லை.

Related Stories:

>