அறந்தாங்கி அருகே இடிந்து விழும் நிலையில் ஆபத்தான ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்: அகற்ற மக்கள் கோரிக்கை

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ளஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கியை அடுத்த புதுவாக்கோட்டையில் கடந்த 1984ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் இந்த சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் பணிக்கு வந்தனர். நாளடைவில் மருத்துவர்கள் இந்த சுகாதார நிலையத்திற்கு வராததால், சுகாதார நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து சுகாதார நிலையத்திற்கு கட்டப்பட்ட கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டது. இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் இந்த கட்டிடம் சேதமடைந்ததால், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டப்பட்ட கட்டிடம் பராமரிப்பு இல்லாததால், முற்றிலும் சேதமடைந்துள்ளது.இந்த சுகாதார நிலையத்திற்கு அருகே அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நூலகம், கோயிகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் சேதமடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புதுவாக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் கூறியது:புதுவாக்கோட்டையில் கடந்த 1984ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்த கட்டிடத்திற்கு அருகே பள்ளி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களும் கோயில்களும் உள்ளன. மக்கள் நடமாட்டம் உள்ள நேரங்களில் சுகாதார நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படும் என்றார்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள புதுவாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

புதுவாக்கோட்டையில் கடந்த 1984ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்த கட்டிடத்திற்கு அருகே பள்ளி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களும் கோயில்களும் உள்ளன.

Related Stories: