டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் வயல்களில் கூண்டுப்புழு தாக்குதல்: கட்டுப்படுத்த ஆலோசனை

டெல்டா பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பருவ நெல் வயல்களில் கூண்டுப்புழு தாக்குதல்களில் இருந்து நெற்பயிரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் அறிவியல் நிலைய பூச்சியல் துறை உதவி பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறுகையில், நெருக்கமாக நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் காலம் தாழ்த்தி பயிரிடப்படும் நெல் வயல்களில் இதன் தாக்குதல் அதிகமாக காணப்படும்.கூண்டுப்புழு சேதத்தின் அறிகுறிகள்:தண்ணீர் தேங்கிய இளம்பயிரில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். புழுக்கள் இலையை சிறு துண்டுகளாக வெட்டி குழாய் போன்று சுருட்டிய கூண்டுகளை உருவாக்கி அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டித் தின்னும். அவை இலைகளில் ஏணி போன்ற வெள்ளை நிற திட்டுகளாத் தனித்தன்மையுடன் காணப்படும்.

சுருட்டிய குழாய் வடிவ இலைக்கூண்டுகள் நெற்பயிரில் ஆங்காங்கே தொங் கிக் கொண்டிருக்கும் அல்லது நீரில் மிதக்கும். இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது தூர்களின் வளர்ச்சி குறைந்து அதனால் பயிரின் வீரிய வளர் ச்சி தடைபடும். சில நேரங்களில் பயிரானது இறந்துவிடும். ஒரு குத்தில் 2 இலைகளுக்கு மேல் முழுவது மாக சேதமடைந்திருந்தால் அது பொருளாதார சேதநிலையை ஏற்படுத்தும்.கூண்டுப்புழு மேலாண்மை முறைகள்: அதிக இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்துள்ள அளவுகளில் மட்டு மே இடவேண்டும்.வயலில் 1 லிட்டர் மண்ணெண்ணையை 5 கிலோ மணல் அல்லது தவிட்டில் கலந்து தூவிவிட்டு, பின்பு வரப்புகளின் இரு ஓரங்களிலும் இருவர் நின்று கொண்டு, நீண்ட கயிற்றைப் பயிர்களின் மீது படுமாறு வேக மாக இழுத்துச் சென்று கூண்டுகளை நீரில் விழவைத்து அழிக்கலாம்.இவ் வாறு பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறினார். சுருட்டிய குழாய் வடிவ இலைக்கூண்டுகள் நெற்பயிரில் ஆங்காங்கே தொங் கிக் கொண்டிருக்கும் அல்லது நீரில் மிதக்கும். இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது தூர்களின் வளர்ச்சி குறைந்து அதனால் பயிரின் வீரிய வளர் ச்சி தடைபடும். சில நேரங்களில் பயிரானது இறந்துவிடும்.

Related Stories: