×

ஆளை மறைக்கும் மேகம்; மெல்ல நனைக்கும் சாரல் கொடைக்கானலில் குளிர் சீசன் ஆரம்பம்: பனியில் உறைய... படையெடுக்கும் பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலங்களாகும். இந்த சீசனில் இதமான தட்பவெப்ப நிலை நிலவும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வாட்டாத குளிரும், சாரலுமாக களைகட்டும். இதன் காரணமாகவே இந்த இரு மாதங்களும் இரண்டாம் சீசன் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் சீசன் முடிந்த நிலையில் தற்போது முன்னதாகவே குளிர் சீசன் தொடங்கியுள்ளது. நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்களும் கொடைக்கானலில் குளிர் சீசன் காலமாகும். இந்த மாதங்களில் கொடைக்கானலில் நிலவும் தட்பவெட்ப நிலை மிகவும் குறைந்து குளிரும், பனியுமாக இருக்கும்.

இந்த குளிர் சூழலை அனுபவிக்கும் விதமாக நேற்று விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்தனர். சாரல் மழை, குளிர், மேக மூட்டம் காரணமாக தூண் பாறையை காண பயணிகள் நேற்று பல மணிநேரம் காத்திருந்தனர். மேக மூட்டம் காரணமாக தூண்பாறை சுற்றுலா பயணிகளுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி மறைந்து, மறைந்து தெரிந்தது. அதுபோல க்ரீன் வேலி வியூ எனப்படும் தற்கொலை முனை பகுதியிலும் மேக மூட்டம் இருந்தது. கொடைக்கானலில் தற்போது அதிகாலையிலும் மாலை நேரம், பின்னிரவு வேளைகளில் பனியின் தாக்கம் அதிகமாக
உள்ளது.


Tags : season ,travelers ,Cold ,Kodaikanal , cloud , man; Cold , Kodaikanal,Freezing , snow ...
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு