தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு செய்ய வேண்டியதை எல்லாம் அரசு செய்தது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நாகர்கோவில்: தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு செய்ய வேண்டியதை எல்லாம் அரசு செய்தது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலி் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை நடத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு செய்ய வேண்டியதை எல்லாம் அரசு செய்தது. தேர்தலை நடத்துவதில் முதல்வருக்கு அச்சம். உள்ளாட்சித் தேர்தல் மக்கள் பங்கேற்பதற்காக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் மறைமுகமானதாக இருக்க கூடாது. ஆள்தூக்குவது என்று ஆளுங்கட்சி முடிவு செய்துவிட்டதால் தான் மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். முன்னதாக, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நகர காங்கிரஸ் அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை பற்றி நரேந்திர மோடிக்கோ, சுப்பிரமணியசுவாமிக்கோ சரிவர தெரியவில்லை. வேண்டுமானால் மன்மோகன்சிங், சிதம்பரம் போன்ற பொருளாதார நிபுணர்களுடன் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு நடத்தாமல் இருந்து வந்தது அ.தி.மு.க. தற்போது பல்வேறு சதி வேலைகளை செய்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையமும் நம்பிக்கையுடன் செயல்படவில்லை. 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது ஏற்புடையது அல்ல. பிறகு இனி எந்த ஒரு நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது. ரஜினி 1995ம் ஆண்டில் இருந்தே அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>