தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.  தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27 மற்றும் 30-ம் தேதி, 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பார்கள் 16-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையும், டிசம்பர் 19-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 91,975 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

2-வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வருகிற 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில், இரண்டு கட்டங்களுக்கும் வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>