×

சென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது: பெரிய வெங்காயத்தின் விலை ரூ.150-க்கும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.160-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் வெங்காயத்தின் விலை சிறிது குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரத்து குறைவால் 2 நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200 வரை விற்றது. இதனால் வெங்காயம் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்றன. வெங்காய் விலை உயர்வை குறிப்பிட்டு ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. திகார் சிலையில் 106 நாட்கள் இருந்து விட்டு, ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வெங்காய மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர்.

கடலூரில் நடைபெற்ற திருமண ஒன்றிற்கு மணமகனின் நண்பர்கள் வெங்காயத்தால் ஆன பொக்கேவை பரிசாக வழங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று வெங்காயத்தின் விலை சிறிது குறைந்துள்ளதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். இன்றைய காலை நேர நிலவரப்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.150 ஆகவும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.160 ஆகவும் உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாயப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chennai , Onion ,Chennai,slightly lower,big onion,Rs.150 , small onions,Rs.160.
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...