டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் தீ விபத்து: 4 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் முயற்சி

டெல்லி: டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனஜ் மண்டி என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 43 பேர்

உயிரிழந்தனர் பலர் காயம் அடைந்துள்ளனர். தீவிபத்தை தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் உடனடியாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அதே கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்ததும், 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அனாஜ் மண்டியில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை. தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழும் பெறவில்லை. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் சிலர், அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநில தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>