×

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது: 7 தொகுதியில் பாஜக முன்னிலை, 1 தொகுதியில் மஜத முன்னிலை

பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. குமாரசாமி ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. 6 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா அரசு உள்ளது.ஆட்சியை, எடியூரப்பா தக்கவைப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை அடுத்து, காலியான இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 13-பேர் பாரதிய ஜனதா வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். 15 தொகுதிகளில் நடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உட்பட 165 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியை தக்கவைக்க முடியும் என கட்டாயத்தில் உள்ளது. 222 இடங்கள் கொண்டதாக கர்நாடக பேரவையில் பெருபான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போது பாஜகவுக்கு 106, காங்கிரஸ் 66, மஜதவுக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. 15 தொகுதிகளில் நடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உட்பட 165 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கர்நாடகா இடைத்தேர்தல் நடந்த 15 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது மேலும் 1 தொகுதியில் மஜத முன்னிலையில் உள்ளது. 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்கும் இல்லாவிட்டால் அங்கு தற்போதைய அரசு நீடிப்பதில் சிக்கல் ஏற்படும்.  இந்த நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி  இன்று துவங்கியது. 


Tags : constituencies ,assembly constituencies ,Karnataka ,BJP ,Majada , 15 Karnataka assembly,constituency,voting counting begins, BJP , 7 constituencies
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...