சென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.77.97, டீசல் ரூ.69.81 காசுகள் நிர்ணயம்

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.97 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.81 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய முன்தினம் விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.97ஆகவும், டீசல், நேற்றைய முன் தினம் விலையில் இருந்து 22 காசு அதிகரித்து லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Chennai , Petrol prices, Chennai rose,14 cents,Rs 77.97 a liter, diesel Rs 69.81
× RELATED நேற்று சற்று சரிந்த நிலையில் இன்று...