×

பெண்களின் பாதுகாப்பில் போலீஸ் பங்கு முக்கியமானது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புனே:  ‘‘பெண்களின் பாதுகாப்பு உணர்வை உறுதி செய்வதில், போலீஸ் துறையின் பங்கு முக்கியமானது’’ என பிரதமர் மோடி கூறினார்.புனேயில்  கடந்த 6ம் தேதி தொடங்கிய போலீஸ் மாநாட்டில் இறுதிநாளான ேநற்று பிர தமர் மோடி கூறியதாவது:
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடையேயும், குறிப்பாக பெண்கள், குழந்தைகளிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், போலீஸ் துறை மீதான நம்பிக்கையை ஊக்குவிக்கவும் துறை அதிகாரிகள் எல்லா நேரத்திலும் முயற்சிக்க வேண்டும். சாமானிய மக்கள் விரும்பும் படியான, செயல்திறன்மிக்க போலீஸ் படையை உறுதிப்படுத்த தொழில்நுட்பம் ஓர் சிறந்த ஆயுதமாக பயன்படுகிறது.  சமூக நலன்களின் பலவீனமான மற்றும் பின்தங்கிய பிரிவினரின் நலனை மனதில் கொண்டு தேசிய நலனுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

இந்த அரசு கிழக்கு நோக்கிய கொள்கையின்படி, வடகிழக்கு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. எனவே, அந்த மாநிலங்களின் டிஜிபிக்கள்  வளர்ச்சித் திட்டங்களுக்கு உகந்த சூழலை உருவாக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டனர். பெண்கள் மீதான கொடூர குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Tags : Modi ,women , protection, women,police , Prime Minister Modi,assertion
× RELATED எம்ஜிஆருக்கு மோடி புகழாரம்