லடாக்கில் -26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர், லடாக்  யூனியன் பிரதேசங்களில் கடும் குளிர் நிலவுகிறது. நேற்று முன்தினம் இரவு  நகரில், மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை  பதிவானது. இதனால், தால் உள்ளிட்ட ஏரிகளின் நீர் உறைந்தது. மேலும்,  குடியிருப்புகளில் உள்ள குழாய்களிலும் பனி உறைந்துள்ளது. ஜம்முவில்  வழக்கத்தை விட இரண்டு டிகிரி செல்சியஸ் குறைந்து வெப்பநிலை மைனஸ் 6  டிகிரியாக காணப்பட்டது.அதே போல், லடாக் யூனியன்  பிரதேசத்துக்கு உட்பட்ட கார்கில் மாவட்டத்தில் உள்ள டிராஸ் பகுதியில்  வெப்பநிலை மைனஸ் 26 டிகிரி செல்சியசாக நிலவியது.

Related Stories:

>