×

இலங்கையில் தொடர் மழை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம்: 10 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்

கொழும்பு: இலங்கையில் தொடர் மழை பெய்து வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் பேர் வீடுகளை காலி செய்து முகாம்களில் தங்கியுள்ளனர். இலங்கையில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் 789 குடும்பங்களைச் சேர்ந்த 2,507 பேர் வீடுகளைவிட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேபோல் வடக்கு பகுதியில் 5 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 64,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் பேர் வீடுகளை காலி செய்து முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் ரேஷன் பொருட்களை இலங்கை அரசு வழங்கி வருகிறது.    இதற்கிடையே, மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Tags : Floods ,areas ,refugees ,Sri Lankan ,Tamil ,asylum seekers , Continuous Rain, Sri Lanka, seekers ,sheltered
× RELATED செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில்...