போலி நகையை அடகு வைத்து 1 லட்சம் அபேஸ்

தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்தவர் பரஸ்மால் ஜெயின் (47). அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஒரு ஆசாமி, 5 தங்க வளையல்களை கொடுத்து ₹1 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு பரஸ்மால், தற்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, என கூறியுள்ளார். அதற்கு அவர், மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், எப்படியாவது பணம் தரும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து. வளையல்களை வாங்கிய பரஸ்மால், வெளியில் இருந்து தெரிந்தவர் மூலம் பணம் வரவழைத்து, ₹1 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற ஆசாமி, அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வளையல்களை பரிசோதித்து பார்த்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது.புகாரின்பேரில்  புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக் கின்றனர்.

Related Stories:

>