×

கோயில் மனைகளில் குடியிருப்போர் பிரச்னைக்கு தீர்வு காண முத்தரப்பு கமிட்டி: முதல்வரிடம் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: கோயில் மனைகளில் குடியிருப்போர் பிரச்சனைக்கு தீர்வு காண முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கோயில் மனைகளில் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு கோயில் மனைகளில் குடியிருப்போர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கோயில் மனைகளில் குடியிருப்போர் கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் தங்கள் சொந்த செலவில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். கோயில் பதிவேடுகளில் தங்கள் பெயரை பதிவு செய்ய கட்டியிருக்கும் வீட்டை கோயிலுக்கு தானமாக  எழுதி கேட்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.கோயில் மனைகளில் குடியிருப்போர் நடைமுறையில் உள்ள அரசாணைகளின் படி தான் இதுவரை வாடகை செலுத்தி வந்தனர்.

தற்போது, பல மடங்கு வாடகையை உயர்த்தி முன்தேதியிட்டு அறிவிப்பு கொடுத்திருப்பதை, வாடகை உயர்வுக்கு மேல் முறையிட்டு மனுக்களில் தீர்வு  வரும் வரை வாடகை உயர்வை தலையிட்டு நிறுத்தி வைக்க வேண்டும்.குடியிருப்போருக்கு பல பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காண அரசு, அறநிலையத்துறை, குடியிருப்போர் அடங்கிய முத்தரப்பு கமிட்டி அமைத்து விவாதித்து தீர்வு காண வேண்டும்.மேற்கூரையை கோயிலுக்கு தானமாக கேட்பதையும், புதிய வாடகையை அமல்படுத்தி நடவடிக்கை எடுப்பதையும் தற்காலிகமாக நிறுத்து வைத்து தமிழகத்தில் 20 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tripartite Committee ,Temple Rooms: Emphasizing the Association of Tenants Tripartite Committee ,Temple Rooms: Residents' Association , Tripartite ,Committee ,Resolve Residents,Residents Association
× RELATED சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக...