துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் வெளியேற்றப்படும் கழிவுநீர் : தொற்றுநோய் பரவும் அபாயம்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 193வது வார்டுக்கு உட்பட்ட துரைப்பாக்கம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ரேஷன் கடை உள்ளது. இங்கு தனி நபர் ஒருவர் கழிவுநீர் தொட்டி அமைத்து கழிவுநீரை அகற்றி வருகிறார்.  இதனால் தொட்டிகள் நிரம்பி ரேஷன் கடை செல்லும் பாதையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் கொசு தொல்ைல அதிகரித்துள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு செல்லும் இந்த பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கழிவுநீரில் தான் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இங்குள்ள  பிள்ளையார் கோயில் தெருவில் கண்ணன் குளம் உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அப்பகுதியை சேர்ந்த  மக்கள் குளத்தை தூர்வாரி சீரமைக்கக் கோரி தனியார் தொண்டு நிறுவனத்தை நாடினர்.

இதனையடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குளத்தை சீரமைப்பதற்காக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் குளத்திற்கு உரிய இடத்தை அளவீட்டு செய்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை  புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குளத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தூர்வாரப்பட்டது. ஆனால் குளத்தின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி நில அளவீடு செய்து தருமாறு வருவாய்த்துறை  அதிகாரிகள் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தூர்வாரி சீரமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் குளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories:

>