×

மாநகராட்சியின் 7 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஸ்பெயின் நிறுவனம் தேர்வு: 4 மண்டலங்கள் ராம்கி நிறுவனத்திடம் வழங்க முடிவு

சென்னை : சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஸ்பெயின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 மண்டலங்கள் ராம்கி நிறுவனத்திடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 5000 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சியால் சேகரிக்கப்படுகிறது. இதில் 60 சதவீத மக்கள் மட்டுமே குப்பைகளை தரம் பிரித்து வழங்குகின்றனர்.தற்போது 1,2,3,7,9,10, 11,12,1314,15 ஆகிய 11 மண்டலங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் பணியை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இறுதியாக தற்போது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்கு இந்த பணியை  கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :சென்னை மாநகராட்சி 9,10,13 ஆகிய மண்டலங்கள் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணி 8 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராம்கி நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்து பிறகு 2 முறை ஒப்பந்த காலம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 1,2,3,7,11,12,14 ஆகிய 8 மண்டலங்களில் தனியாரிடம் கொடுக்க முடிவு ெசய்யப்பட்டது.

இதன்படி தேனாம்பேட்ைட, கோடம்பாக்கம், அடையார், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் ஸ்பெயினை சேர்ந்த அர்பேஸ்சர் எஸ்ஏ நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.  சென்னையில் 200 வார்டுகளில் 92 வார்டுகள் இந்த நிறுவனம் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.ஏற்கனவே துப்புரவு பணிகளை மேற்கொண்ட ராம்கி நிறுவனம் திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய மண்டலங்களில் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த நிறுவனம் 48 வார்டுகளில் பணிகளை மேற்கொள்ளும். இந்த நிறுவனங்களுக்கான பணி ஆணை 10 நாளில் வழங்கப்படும். அடுத்த மூன்று மாதம் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபடும். அடுத்த ஆண்டு ஜுலை மாதத்தில் இந்த நிறுவனங்கள்  முழுமையாக செயல்பட தொடங்கும். இதன்பிறகு இந்த மண்டலங்களில் உள்ள துப்புரவு பணியாளர்களை மீதம் உள்ள ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.விக.நகர், அண்ணாநகர் மண்டலங்களுக்கு இடமாற்றும் செய்யும் பணி தொடங்கும்.
ஏற்கனவே பின்பற்றும் குப்பையின் எடையை பொறுத்து பணம் வழங்கும் முறை இப்போது பின்பற்றபடாது. தனியார் நிறுவனங்களின் பணியை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும். குப்பை தரம் பிரித்தல், முறையாக மறுசுழற்சி செய்தல்  உள்ளிட்ட 33 பிரிவுகளின் அடிப்படையில் கட்டணம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அர்பேஸ்சர் எஸ்ஏ
ஸ்பெயினைச் சேர்ந்த அர்பேஸ்சர் நிறுவனம் 27க்கும் மேற்பட்ட நாடுகளில் நகரமைப்பு, குப்பை மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான பணிகளை செய்துவருகிறது.. இந்தியாவில் டெல்லியில் இந்த நிறுவனம் துப்புரவு பணிகளை தற்போது  மேற்கொண்டு வருகிறது.

Tags : Spain ,zones ,Ramki ,Corporation ,Zones of Corporations Spaniard , 7 zones ,corporation, carry , cleaning work,provide to Ramki
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...