×

சென்னை போட்டிக்கு இன்றும் டிக்கெட் வாங்கலாம்

சென்னை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே  டிச. 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

ரசிகர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்களை வாங்கினர். இந்த நிலையில், இன்றும் டிக்கெட் விற்பனை தொடரும் என்று டிஎன்சிஏ நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் காலை 10.30 மணி முதல் சேப்பாக்கம்  விக்டோரியா விடுதி சாலையில் உள்ள டிஎன்சிஏ அலுவலக பூத்களில் டிக்கெட்களை வாங்கலாம். குறைந்தபட்ச விலை ₹1200. இது தவிர ₹2400, விருந்தினர் தளங்களுக்கு ₹4000, ₹4800, ₹6500, ₹8000, ₹12,000 விலைகளிலும் டிக்கெட் கிடைக்கும். www.paytm.com அல்லது  www.insider.in  என்ற இணையதளங்கள் மூலமாகவும் வாங்கலாம்.

Tags : match ,Chennai , Tickets, Chennai match , purchased today
× RELATED கோவையில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி