மெஸ்ஸி 35வது ஹாட்ரிக் ரொனால்டோவை முந்தினார்

நியூ கேம்ப்: ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பார்சிலோனா எப்சி அணி 5-2 என்ற கோல் கணக்கில் மல்லோர்கா அணியை வீழ்த்தியது.பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் போட்டு அசத்தினார். அவர் 17வது, 41வது மற்றும் 83வது நிமிடத்தில் கோல் அடித்தார். கிரீஸ்மேன் (7வது நிமிடம்), சுவாரெஸ் (43வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர். மல்லோர்கா சார்பில் புடிமிர் 35வது மற்றும் 64வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

லா லிகா தொடரில் மெஸ்ஸி தனது 35வது ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறினார். கிறிஸ்டியானோ ரொனால்டோ (34 ஹாட்ரிக்) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆண்டின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை 6வது முறையாக வென்று சாதனை படைத்துள்ள மெஸ்ஸி, இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக குடும்பத்தினருடன் மைதானத்துக்குள் வந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பார்சிலோனா (34 புள்ளி), ரியல் மாட்ரிட் (34), செவில்லா (30), ரியல் சோசிடாட் (26), பில்போ (26), அத்லெடிகோ மாட்ரிட் (26), வாலன்சியா (26) அணிகள் முன்னிலை வகிக்கின்றன.

Related Stories:

>