×

ரஞ்சி சீசன் இன்று தொடக்கம் தமிழகம் - கர்நாடகா பலப்பரீட்சை

திண்டுக்கல்: தமிழகம் - கர்நாடகா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டம், திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2019-20 சீசனில் மொத்தம் 38 அணிகள் எலைட் ஏ, பி, சி மற்றும் பிளேட் பிரிவுகளில் களமிறங்குகின்றன. எலைட் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது. இந்த பிரிவில் மும்பை, பரோடா, இமாச்சல், சவுராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ரயில்வேஸ் அணிகளின் சவாலையும் தமிழகம் சந்திக்க உள்ளது.

திண்டுக்கல், என்பிஆர் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறும் போட்டி தமிழக அணிக்கு சரியான சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் மற்றும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியிடம் அடைந்த தோல்விகளுக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் விஜய் ஷங்கர் தலைமையிலான தமிழக அணி களமிறங்குகிறது.தமிழகம்: விஜய் ஷங்கர் (கேப்டன்), ஆர்.அஷ்வின், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), முரளி விஜய், பாபா அபராஜித், முருகன் அஷ்வின், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), கே.முகுந்த், அபினவ் முகுந்த், டி.நடராஜன், சாய் கிஷோர், ஷாருக் கான், மணிமாறன் சித்தார்த், அபிஷேக் தன்வார், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ்.கர்நாடகா: கருண் நாயர் (கேப்டன்), ஷ்ரேயாஸ் கோபால், மயாங்க் அகர்வால்,  பவன் தேஷ்பாண்டே, கே.எஸ்.தேவய்யா, கிருஷ்ணப்பா கவுதம், வி.கவுஷிக், டேவிட்  மத்தியாஸ், ரோனிட் மோரே, தேகா நிஷ்சல், தேவ்தத் படிக்கல், ரவிகுமார்  சமர்த், பி.ஆர்.ஷரத் (விக்கெட் கீப்பர்), னிவாஸ் ஷரத் (விக்கெட் கீப்பர்),  ஜெகதீஷா சுசித்.

Tags : season ,Ranji ,Karnataka ,Tamilnadu , Ranji ,starts , Tamilnadu - Karnataka ,Multiple Examination
× RELATED அறுவடை பருவத்தில் மழை கொத்தமல்லி மகசூல் பாதிப்பு