மதுரை, விருதுநகரில் டெங்குவுக்கு சிறுவன், சிறுமி பலி

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா. வாழைக்காய் வியாபாரி. இவரது மகன் துரை மகாராஜன் (12). ஆலம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். மகாராஜன் காய்ச்சல் காரணமாக, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது உறுதியானது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

Advertising
Advertising

விருதுநகர் மாவட்டம் அரசகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களது மகள் சஞ்சனா (5) இங்குள்ள தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்ததில் சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. நேற்று அதிகாலை சஞ்சனா உயிரிழந்தார்.

Related Stories: