அமைச்சர் காமராஜ் அறிவிப்பு ரேஷன் கடைகளில் 12, 13ம் தேதிகளில் மானியத்தில் வெங்காயம் விற்பனை

தஞ்சை: வரும் 12, 13 தேதிகளில் தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விநியோகிக்கப்பட உள்ளதாக காமராஜ் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி: தமிழகத்தில் வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காய சாகுபடியில்  கூடுதலாக மழை பெய்ததால் வரத்து குறைந்து விலை உயர்ந்தது. சில வாரங்களில் சரியாகி விடும். மத்திய அரசு ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை எகிப்து மற்றும் துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.

வெங்காயத்தை, தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வரும் 12, 13ம் தேதிகளில் விநியோகிக்கப்படும். மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்க போகிறது. இழுபறி என்ற வேலை கிடையாது. எங்களுக்கு தேர்தலை பார்த்து பயம் கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்.இவ்வாறு காமராஜ் தெரிவித்தார்.

Related Stories: