வெங்காய விலை உயர்வு மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை

தஞ்சை: ‘‘வெங்காய விலை உயர்வால் மத்திய, மாநில அரசுகள் வீழ்ச்சியடைய போகிறது’’ என்று வைகோ எச்சரித்தார்.தஞ்சையில் மதிமுக பொது செயலாளர் வைகோ அளித்த பேட்டி:  வார்டு மறுவரையறைகள் முறையாக செய்யாமல் அவசர கோலத்தில் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளனர். நியாயமாக தேர்தல் நடத்த வேண்டுமென தி.மு.க. உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லியிருக்கிறார். நல்லது, சந்தோஷம். வெங்காய விலை உயர்வால் மத்திய, மாநில அரசு வீழ்ச்சியடைய போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: