மூன்று நாளில் அழுகும் வெங்காயத்தை பதுக்குவதா? நாயகம், நாசிக் மொத்த ஏஜென்ட்

வழக்கமாக இந்தகாலக்கட்டங்களில் வெங்காய வரத்து 6,000 டன்னாக இருக்கும். ஆனால், பருவம் தவறிய மழையால் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டங்களில் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு வெங்காயம் சப்ளை செய்வார்கள். அங்கு தற்போது மழை அதிகம் பெய்து வருவதால் அங்கும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழையால் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் விளைச்சலை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாசிக் மண்டலம் மட்டுமின்றி லாசல்காவ், புனே, அகமத்நகர், பிம்பல்காவ், துலே, உம்ரானா, மன்மாட், ஏவ்லா உள்ளிட்ட மொத்தசந்தைகளில் இருந்து அதிக அளவில் வெங்காயங்களை ஏற்றுமதி செய்வது வழக்கம்.மொத்த சந்தைகளுக்கு தினசரி சராசரியாக வரவேண்டிய வெங்காயத்தில் தற்போது 30 சதவீதம் மட்டுமே வருகிறது.

Advertising
Advertising

நாள் ஒன்றுக்கு சராசரியாக 6,000 டன் வரத்து இருந்த மொத்த சந்தைக்கு இப்போது 1,500 டன் வெங்காயம்தான் கொண்டு வரப்படுகிறது. வெங்காயம் பதுக்கப்படுகிறது என்ற காரணத்தை  ஏற்க முடியாது. காரணம், இப்போதைய காலக்கட்டங்களில் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே இருப்பில் வைக்க முடியும். அதற்கு ஒரு நாள் அதிகமானால் கூட அந்த வெங்காயம் அழுகிப் போய்விடும். ஆகையால், வரக்கூடிய வெங்காயத்தை உடனடியாக சந்தைக்கு அனுப்பினால் மட்டுமே நஷ்டத்திலிருந்து மொத்த வியாபாரிகள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.n 2001 அக்டோபர் முதல் 2004 வரை ஒரு கிலோ வெங்காயத்தின் விலை குறைந்தபட்சம் சராசரியாக 2.12 ரூபாயாகவும், அதிகபட்சமாக 15 ரூபாயாகவும் இருந்தது.

* 2008 ஆகஸ்ட் முதல் 2009 ஆகஸ்ட் மாதம் வரை குறைந்தபட்ச விலை ₹2.52 ஆகவும், அதிகபட்சமாக ₹18 ஆகவும் இருந்தது.

* 2009-2011 காலக்கட்டங்களில் குறைந்தபட்ச விலை ₹5 ஆகவும் அதிகபட்சம் ₹47 ஆகவும் இருந்தது.

* 2012ம் ஆண்டு குறைந்தபட்சம் ₹4 ஆகவும், அதிகபட்சம் ₹18 ஆகவும் இருந்தது.

* 2013 அக்டோபர் மாதத்தில் 8 ரூபாயாக இருந்த வெங்காயம் அடுத்த சில மாதங்களில் அதிரடியாக ₹58.75 ஆக உயர்ந்தது.

* 2018ல் அதிகபட்சமாக 40 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 22 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

* கடந்த 2018-2019 மட்டும் இந்தியாவிலிருந்து 24 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.  இந்தியாவில் கடந்த ஆண்டு 2 கோடியே 34 லட்சத்து 80 ஆயிரம் டன் வெங்காயம் உற்பத்தியானது.

* மொத்த சந்தைக்கு வெங்காய வரத்துக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநில மொத்த சந்தைகளில் கிலோ வெங்காயம் ₹80 முதல் ₹90 வரை மொத்த விற்பனையானாலும் சில்லரைச் சந்தையில் ₹140 முதல் ₹150 வரை விற்பனையாகிறது

* சூப்பர் வி.ஐ.பி குவாலிட்டி, வி.ஐ.பி பிக் குவாலிட்டி, குவாலிட்டி, மீடியம் குவாலிட்டி, கோல்ட்டா, கோல்ட்டி, புது வெங்காயம் ஆகிய 7 ரகங்களில் வெங்காயம் விற்பனையாகிறது.

* ஆசியாவின்  மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்காவ் மார்க்கெட்டுக்கு தினசரி சராசரியாக 10 ஆயிரம் குவிண்டால் முதல் 20 ஆயிரம் குவிண்டால் வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது 3,500 முதல் 4,000 குவிண்டால் வெங்காயம் மட்டுமே வருகிறது.

ஜூன் மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை வேண்டுமானால் நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து விற்பனை செய்யமுடியும். இதனை பழைய வெங்காயம் என்று அழைப்பார்கள். அதன் வரத்து தற்போது இல்லை. வெங்காய வரத்து குறைவால் மேலும் சில நாட்களுக்கு விலை ஏற்றம் இருக்கக்கூடும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 6,000 டன் வரத்து இருந்த மொத்த சந்தைக்கு இப்போது 1,500 டன் வெங்காயம்தான் கொண்டு வரப்படுகிறது. வெங்காயம் பதுக்கப்படுகிறது என்ற காரணத்தை கூறமுடியாது.

Related Stories: