வெளிநாட்டு வெங்காயம் இன்னும் வந்தபாடில்லை: சவுந்தரராஜன், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர்

இந்தியா முழுவதும் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் பெரிய வெங்காயம் (பல்லாரி) சப்ளை ஆகிறது. ஆண்டில் சுமார் 8 மாதத்திற்கு இந்த மாநிலங்களில் இருந்து  மற்ற மாநிலங்களுக்கு வெங்காயம் சப்ளை ஆகும். சென்னையை பொறுத்தவரை 6 மாதங்கள் வரை பெரிய வெங்காயம் அங்கிருந்து தான் வருகிறது. சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது. இந்த வருடம் மகாராஷ்டிராவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை அதுவும், தொடர்மழையாக பெய்தது. இதனால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதோடு நின்று விடாமல் கர்நாடகாவிலும் சேர்த்து மழை பெய்து அங்கும் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநிலத்திலும் ஏற்பட்ட பாதிப்பு தான் இந்த விலைவாசி ஏற்றத்துக்கு காரணம். இன்னும் ஒரு மாதத்தில் விலை உயர்வு என்பது சரியாகி விடும்.சென்னை ேகாயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு 80 லாரிகளில் சுமார் 20 டன் அளவுக்கு தினமும் பெரிய வெங்காயம் வந்தது. இது தற்போது 20, 25, 30 லாரிகளில் என்று தான் வெங்காயம் வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ பெரிய வெங்காயம் தரத்திற்கு ஏற்றாற் போல் கிலோ ரூ.25, ரூ.30 என்ற நிலையில் தான் விற்பனை செய்யப்பட்டது.

Advertising
Advertising

ஆனால் தற்போது வரத்து குறைவால் கோயம்பேடு மொத்த மார்க்கெட்டிலே கிலோ ரூ.140க்கு விற்கப்படுகிறது. அதே போல தமிழகத்தில் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) 10 லாரிகளில் வந்தது. இது தற்போது 5 லாரிக்கும் குறைவாகதான் வருகிறது. சாதாரண நாட்களில் சின்ன வெங்காயமே ரூ.30க்கு விற்கப்பட்டது. திருச்சி பெரம்பலூர் மாவட்டங்களிலேயே வெங்காயம் உற்பத்தியாகிறது. அங்கிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, காரைக்குடி பகுதிகளுக்கு  செல்கிறது. சென்னைக்கு வருவது மிகவும் கம்மியாக உள்ளது. அங்கேயே விலை அதிகமாகத்தான் உள்ளது. தற்போது சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயமே ரூ.150க்கு விற்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மழையால் விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு வெங்காயம் பூமிக்கு உள்ளேயே அழுகி போய்விட்டது. இது தான் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம்.

வெங்காயத்தை நறுக்கினால் கண்ணில் கண்ணீர் வரும். ஏனென்றால் அது சிட்ரிக் ஆசிட். சீக்கிரம் கெட்டு ேபாகக்கூடிய பொருள். உருளைக்கிழங்கை சேமித்து வைக்கலாம், தக்காளியை சேமித்து வைக்கலாம். ஆனால் வெங்காயம் உடனுக்குடன் கெட்டு போகக்கூடிய பொருள். இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் 5 மாவட்டத்தில் பெரிய வெங்காயம் சேமித்து வைக்கிறார்கள். அதுவும் வெங்காயம் செடியோடு வைத்துதான் சேமித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பெரம்பலூரில் இது போன்று சேமித்து வைக்கிறார்கள். சின்ன வெங்காயத்தை ஒரு மாதத்திற்கு மட்டும் தான் வைக்க முடியும். அதற்கு அப்புறம் சேமித்து வைக்க முடியாது. இரண்டாவது பருவக்காலம் உற்பத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பருவம் 90 நாட்கள் விளைச்சல். இந்த விளைச்சல் தொடங்கி 60 நாட்கள் ஆகிறது. இன்னும் 30 நாட்களில் விளைந்து வந்து விடும். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குள் (பொங்கலுக்குள்) அந்த வெங்காயம் வந்து விடும். அதன் பிறகு விலை குறைந்து விடும். வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வருகிறது, வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் இன்னும் வந்தபாடில்லை. ஆனால் எங்கு தான் வருகிறது என்றும் தெரியவில்லை. இரண்டாவது பருவக்காலம் உற்பத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பருவம் 90 நாட்கள் விளைச்சல். இந்த விளைச்சல் தொடங்கி 60 நாட்கள் ஆகிறது. இன்னும் 30 நாட்களில் விளைந்து வந்து விடும்.

Related Stories: