ஊதியம் மற்றும் பணிச்சுமை திருத்தம் செய்ய குழு அமைப்பு: தமிழக மின்வாரியம் நடவடிக்கை

சென்னை: தமிழக மின்வாரியத்தில் ஊதியம் மற்றும் பணிச்சுமை திருத்தம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 1.12.2015ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இது கடந்த 30.11.2019ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதையடுத்து 1.12.2019ம் தேதியிலிருந்து புதிய ஊதியம் மற்றும் பணிச்சுமை திருத்தம் குறித்த அறிக்கை வழங்க வேண்டும். எனவே இதற்கான குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம்.

இதையடுத்து மின்வாரியம், தொழிற்சங்கங்கள்-அதிகாரிகள் அடங்கிய ஊதியம் மற்றும் பணிச்சுமை திருத்தம் செய்வதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மின்வாரிய தொமுச, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய கணக்கு மற்றும் நிர்வாக ஊழியர்கள் கூட்டமைப்பு, மின்சார பிரிவு அண்ணா தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர்கள் சங்கம், மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இக்குழுவில் இடம்பெறுகின்றன.

Related Stories: