கிண்டி மெட்ரோவில் ஷேர் ஆட்டோ சேவை அதிகம்: அதிகாரி தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ஷேர் ஆட்டோ சேவையை கிண்டி நிலையத்தில் மாதம் தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துவதாக மெட்ரோ ரயில் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ₹5 கட்டணத்துடன் ஷேர் ஆட்டோ சேவையை அறிமுகப்படுத்தியது. தற்போது குறைந்தது மாதம் தோறும் 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரையில் ஷேர் ஆட்டோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

அதிகபட்சமாக கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாதம் தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் கிண்டி நிலையத்தில் 11 ஆயிரத்து 559 பேர் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக திருமங்கலம் உள்ளது. அங்கு, 5,570 பேர் சேவையை பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Related Stories: