×

கடையம் அருகே பரபரப்பு: தென்னந்தோப்பை துவம்சம் செய்த யானைகள்

கடையம்: கடையம் அருகே தென்னந்தோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெத்தாம்பிள்ளை குடியிருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் தென்னந்தோப்பு, மாந்தோப்பு, புளியந்தோப்பு, வாழை, நெல்லை, எலுமிச்சை தோப்பு உள்ளிட்ட பல வகையான பழமரங்களின் தோட்டங்கள் உள்ளன. இதில் குட்டப்பன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இன்று அதிகாலை 2 மணி அளவில் யானைக்கு–்ட்டி உட்பட 7 காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்தன. இந்த யானைகள் அங்கு நன்கு வளர்ந்திருந்த 41 தென்னை மரங்களை சாய்த்தும், பிடுங்கியும் குருத்துக்களை தின்று அட்டகாசம் செய்தன. அப்போது அங்கு காவலில் இருந்த காவலர் பால்ராஜ் என்பரது அந்த யானைக் கூட்டத்தை டார்ச் லைட் அடித்து வனப்பகுதிக்குள் விரட்டினார்.

தென்னந்தோப்புகளை அங்கு துவம்சம் செய்த பின் இந்த யானைகள் இதே பகுதியில் உள்ள மங்களா குடியிருப்பு,கருத்தப்பிள்ளையூர்,செட்டி பனங்காடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இதற்கு முன்பு இதே தோப்பில் 60 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து நாசம் செய்தது, குறிப்பிடத்தக்கது.மேலும் ராமநதி அணை அருகே உள்ள கடவக்காடு பகுதி வயங்களில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொடர்ந்து யானைகள் முகாமிட்டு வருவதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். யானைகளை நிரந்தரமான வனப்பகுதிக்குள் விரட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags : stall , Dwarfs, cows, elephants
× RELATED மீனவர் பிரச்னை ஒன்றிய அரசை கண்டித்து 11ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்