×

தட்டார்மடம் அருகே மழைக்கு வீடு இடிந்து சேதம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பக்கமுள்ள சொக்கன்விளையை சேர்ந்தவர் கந்தன்(70).  இவரது மனைவி இறந்துவிட்டார். 2 மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் கந்தன், ஓலை குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது.

இதில் கந்தனின் வீட்டுச்சுவர் மழைநீரில் வலுவிழந்து திடீரென இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்தபோது கந்தன், வீட்டில் இல்லை. சம்பவம் நடந்த 2 நாளாகியும் வருவாய்துறையினர் சென்று பார்வையிடவில்லையென கூறப்படுகிறது. எனவே சேதமான வீட்டை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென கந்தன் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tattarammadu Tattarammadu , Tataramdam, rain, house, damage
× RELATED கடலூரில் புயல் சேதங்களை முதல்வர் எடப்பாடி ஆய்வு